Knit India Magazine

திருப்பூர், நிப்ட்- டீ கல்லூரி சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

திருப்பூர், நிப்ட்- டீ கல்லூரியில் மார்ச் – 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பெண்களின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் “Development of women” என்ற தலைப்பின் கீழ் பழங்காலம் முதல் இன்று வரை உள்ள பெண்களின் ஆடை மாற்றங்களை விரிவாகக்  காட்சிப்படுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பண்டைய கால பெண்கள், குழந்தைகளின் ஆடைகள், இன்றைய நவீன கால பெண்களின் ஆடைகள் போன்றவற்றையும் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதை குறிக்கும் வகையில் மருத்துவர், காவல் அதிகாரி, ஆசிரியர், தொழில்முனவர், ஆடை வடிவமப்பாளர் போன்ற பல்வேறு துறைப் பெண்களை காட்சிப்படுத்தினர்.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women in Tamil Nadu) என்பது கொடுமைப்படுத்துதல், கடத்தல், வரதட்சணை தொடர்பான வன்முறை, குடும்ப வன்முறை ஆகியவற்றை பெண்களின் ஆடை அலங்கார அணிவகுப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *