Knit India Magazine

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கடன் திட்ட முகாம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கடன் திட்ட முகாம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் திட்ட முகாம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலான்மை இயக்குனர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், உதவிப்பொது மேலாளர் திருமதி. சித்ரா செண்பகவல்லி ஆகியோர் காணொலி வாயிலாகவும், கோயமுத்தூர் மண்டல மேலாளர் திருமதி.எஸ். பேபி, திருப்பூர் கிளை மேலாளர் திரு. லட்சுமி நாராயணன் கிளை அலுவலர்கள் ஆர்.ஜீவா மற்றும் ஆர்.ஹரீஷ் ஆகியோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் பேசும் போது, கடந்த 30 ஆண்டுகளாக இக்கழகம் திருப்பூர் தொழிற்துறையினருக்கும் தொழில் வளர்ச்சிக்கும் செய்துள்ள பங்களிப்பை நினைவு கூர்ந்தார். 

கோவை மண்டல மேலாளர், திருமதி எஸ். பேபி. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) செயல்படுத்தி வரும் கடன் உதவித்திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.

Share this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *