திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் – டீ கல்லூரியில் இறுதியாண்டு அப்பரேல் ஃபேஷன் டிசைன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் சஞ்சய் குமார் ஓவியம் மற்றும் ஆடை வாடிவமைப்பு இரண்டையும் இணைத்து புதுமையான ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். பேராசிரியர் பூபதி விஜயின் வழிகாட்டுதலின் கீழ், வான் கோ, பிக்காசோ மற்றும் மைக்கலாஞ்சலோ ஆகியோரின் கலைப் படைப்புகளை சமகால ஆடை வடிவமைப்புகளுடன் இணைத்து புதுவகையான ஆடைகளை தயாரித்துள்ளார் .
கியூரேஷன் மற்றும் புதுமையான டிசைன்கள் மூலம் இன்றைய தலைமுறையினருக்கு கலை நயம் மிக்க ஆடைகளை உருவாக்கியுள்ளார். இது குறித்து மாணவர் சஞ்சய் கூறும்போது, “புகழ்பெற்ற ஓவியங்கள் மற்றும் கலைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் மற்றும் அவர்களின் ஓவியங்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாகவும், இந்த ஆடைகளை நான் உருவாக்கியுள்ளேன். இந்த ஆடைகள் இன்றைய தலைமுறையினருக்கு கலைகள் மேல் ஆர்வத்தை உருவாக்கும் மற்றும் இந்த ஆடைகள் பேஷன் துறையில் ட்ரென்ட்ஸ்ட்டெர் ஆகவும் இருக்கும்”. என்றார். புதுமையான முயற்சி வெற்றி பெறட்டும்.
Leave a Reply