படிப்பு முடிந்தவுடன் அல்ல படிக்கும் போதே வேலை வாய்ப்புகள் – – கல்லூரித் தலைவர் பி.மோகன்
விரைவில் வரப்போகிறது பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள். பொறியியல் படிப்புகளை விட கலை அறிவியல் படிப்புகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகள் இருக்கும். காரணம் மற்ற படிப்புகள் எல்லாம் பட்டம் பெற்ற பின்புதான் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிஃப்ட் டீ கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் போதே பகுதி நேர வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு படித்தவர்களுக்கு வாழ்நாளின் இறுதிவரை வேலை வாய்ப்புகளுக்கோ அல்லது தொழில் வாய்ப்புகளுக்கோ குறையே இருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும். காரணம் ஆடைத்துறை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. படித்து முடித்தவுடன் வேலை செய்ய விருப்பமில்லாதவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தர நிஃப்ட் டீ கல்லூரி நிர்வாகம் வழிகாட்டுதல்களை வழங்கும் என்பது மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தால் நடத்தப்படும் இந்தக் கல்லூரியில் சுமார் 230 -க்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதியாளர்கள் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வடிவமைப்பு, வர்த்தகம், மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை பற்றி இங்கு கற்பிக்கப்படுகிறது.
ஃபேஷன் படிப்புகள் படிக்க விருப்பமில்லாத மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு உள்ள புதிய பாடப்பிரிவுகள் இங்கு உள்ளது.உதாரணமாக B.Sc, Artificial Intelligence & Data Science, B.Sc, Computer Science, B.Com Computer Application, B.Com Professional Accounting, மற்றும் B.B.A, International Business போன்ற வேலை வாய்ப்பு நிச்சயமாகக் கிடைக்கும் பட்டப்படிப்புகளை ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம்.
பல்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகம் மாணவ மாணவிகளின் அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி வாய்ப்பிற்கும் பயனளிக்கும் வகையில் கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. மேலும், பின்னலாடைத் துறையில் உலக அளவில் அறிமுகப்படுத்தப்படும் நவீன இயந்திரங்களை உள்ளடக்கியது இந்தக் கல்லூரியின் ஆய்வகம். ஆய்வகத்திலும் நூலகத்திலும் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் ஏராளமான தகவல்கள் உள்ளது.
இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ஒரு முழுமையான ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாடத் திட்டங்களைப் பொறுத்தவரை தொழில் நிபுணர்களின் உதவியோடு சமகாலத்தில் தொழிலுக்கு என்ன பாடங்கள் மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது என்று திட்டமிட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. பேராசிரியர்கள் மட்டும் பாடம் நடத்தாமல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். தொழிலில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அந்த மாற்றம் பாடத்திட்டத்திலும் கொண்டுவரப்படுகிறது.
தங்கும் விடுதி
கல்லூரி வளாகத்திற்குள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதி போதுமான பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. விடுதி மாணவர்களுக்கு தரமான உணவும் சுத்தமான குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி
திருப்பூர் நகரம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியுள்ள ஈரோடு, அவினாசி, பெருமாநல்லூர், காங்கேயம், பொங்களூர், பல்லடம் மற்றும் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்கள் தினசரி வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்ல கல்லூரிப் பேருந்து வசதிகள் உள்ளது.
கல்வி உதவித்தொகை
பள்ளி அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் மாநில அளவில் எந்த இடத்திலும் இடம் பிடித்த மாணவர்களுக்கும், மூன்று ஆண்டுகளுக்கும் முழுமையாக 50 சதவிகிதம் கல்லூரிக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
அடுத்ததாக, பனிரெண்டாம் வகுப்பில் மொத்த மதிப்பெண்களில் 80 – 85 சதவிகிதம் பெற்றவர்களுக்கு 5 % 86 – 90% பெற்றவர்களுக்கு 10 சதவிகிதமும் 91 – 95% பெற்றவர்களுக்கு 15 சதவிகிதமும் 96% மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 20 சதவிகிதமும் கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். அதேபோல் விளையாட்டுப் பிரிவுகளில் வரும் மாணவர்களுக்கு அவர்கள் ஜோனல் அளவில் வெற்றி பெற்றால் 5 சதவிகிதமும் டிவிசனல் அளவில் விளையாடும் மாணவர்களுக்கு 10 சதவிகிதமும் மாநில அளவில் விளையாடும் மாணவர்களுக்கு 20 சதவிகிதமும் மாநில அளவில் மெடல் வென்றுள்ள விளையாட்டு வீரர்களுக்கு 30 சதவிகிதமும் தேசிய அளவு விளையாட்டு வீரர்களுக்கு 50 சதவிகிதமும் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
கல்லூரி 26 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வெளியே சுமார் 12,000 மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல நகரங்களிலும் உலகின் பல நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் பெற்று சிறந்து விளங்குகிறார்கள். பலர் தொழிலதிபர்களாக வடிவமைப்பாளர்களாக தலை சிறந்த நிறுவனங்களில் இயக்குனர்களாக மேலாளர்களாக மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வருகிறார்கள், என்பது கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் தகவல்.
உங்களை விட உங்களுக்கான சிறந்த முடிவுகளை யாரும் எடுத்து விட முடியாது. இக் கல்லூரி உங்கள் வாழ்க்கைக் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் வண்ணம் சேர்க்கும். வாழ்த்துகள்.
விவரங்களுக்கு
NIFT-TEA College of Knitwear Fashion,
SIDCO, Mudalipalayam, Tiruppur – 641 606.
www.nifttea.ac.in, info@nifttea.ac.in
Tel . : 0421 2374200, Mob. : 80569 31111.
Leave a Reply