ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் துணைத்தலைவர் டாக்டர் ஆ.சக்திவேல் கூறியதாவது:-
இந்திய ருபாய் மதிப்பில் டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது டிசம்பர் 2024 மாதத்திற்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி (Readymade Garments) 15.2% . இதேபோல், ஏப்ரல்-டிசம்பர் 2024-25 காலகட்டத்திற்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி ஏற்றுமதி ரூ. 94,936.2 கோடி அதாவது ஏப்ரல்-டிசம்பர் 2023-24 நிதியாண்டை விட 13.2% வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று கூறினார்.
அமெரிக்க டாலர் மதிப்பில்: கடந்த டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது இந்த டிசம்பர் 2024 மாதத்திற்கான ஆடை ஏற்றுமதி 12.9% அதிகரித்துள்ளது.ஏப்ரல்-டிசம்பர் 2024-25 – ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி (Readymade Garments) ஏற்றுமதி USD 11316.20 மில்லியன் ஆகும். இது மதிப்பு நிதியாண்டு 2023-24 ஏப்ரல்-டிசம்பரை விட 11.6% வளர்ச்சி. அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக துணைத் தலைவர் டாக்டர். ஆ. சக்திவேல்கூறும்போது,
கடந்த டிசம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், இந்த டிசம்பர் 2024ல் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 15.2% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ. 94,936 கோடியாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13.2% வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஏற்றுமதி வளர்ச்சியின் பாதை இம்மாதமும் தொடர்கிறது, மேலும் திருப்பூர் பின்னலாடை துறை கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 15% வளர்ச்சியை அடையும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நிதியாண்டில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ. 40,000 கோடியாக உயருமென்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறினார் டாக்டர் ஆ. சக்திவேல்.
Leave a Reply