புது டெல்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ்-2024 – கண்காட்சி பற்றி, ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக தென் பிராந்தியப் பொறுப்பாளர் டாக்டர் ஆ சக்திவேல் கூறியதாவது..
” மாண்புமிகு வர்த்தகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் திரு. பியூஸ் கோயல் அவர்களின் சிந்தனையில் தோன்றியதுதான் இந்த மெகா கண்காட்சியான பாரத் டெக்ஸ்-2024. இக்கண்காட்சி (5F) 5-எஃப் எனப்படும் பண்ணை(Farm), பஞ்சு(Fiber), தொழிற்சாலை(Factory), பேஷன்(Fashion), வெளிநாடு(Foreign) ஆகிய ஐந்து துறைகளை ஒன்றுக்கொன்று அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இன்று உலகமே பாராட்டும் வகையில் நடந்துள்ளது.
இதற்காக மாண்புமிகு அமைச்சர் 24×7 என்ற முறையில் பணியாற்றினார் என்பது மிகவும் பாராட்டுக்குரியது. அவரின் தலைமையின் கீழ் ஐவுளித்துறைச் செயலாளர் திருமதி ரச்சனா ஷா அவர்களும் ஏனைய மத்திய அரசு துறை அதிகாரிகளும் பணியாற்றி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர்.இந்தக் கண்காட்சியை நமது பாரத பிரதமர் அவர்கள் கடந்த 26 பிப்ரவரியில் துவங்கி வைத்தார்கள்.
மேலும் இக்கண்காட்சி நான்கு நாட்களாக (Feb-26 முதல் 29 – தேதி வரை) பாரத் மண்டபம், யசோ பூமி ஆகிய இடங்களில் ஜவுளித் துறையின் உதவியுடன் ஐவுளி துறை சார்ந்த 11 ஏற்றுமதி கவுன்சில்கள் இணைந்து இக்கண்காட்சியை நடந்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்காட்சியில் மதிப்பு கூட்டப்பட்ட அனைத்து ஜவுளித்துறை சார்ந்த சந்தைகளின் வளர்ச்சிக்காக, வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்பும் வகையில் அரங்கங்கள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு, கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பலன் இன்று முழுமையாக கிடைக்கப்பெற்றது. பல வெளிநாட்டு வர்த்தகர்களும், உள்ளூர் வர்த்தக முகவர்களும் இந்த பாரத் கண்காட்சியை பார்வையிட்டார்கள். நான்கு மாதங்களில் வெளிநாடுகளுக்கு இணையாக திட்டமிடப்பட்டு சர்வதேசத் தரத்தில் அனைத்து அரங்கங்களையும் அமைத்து இந்த கண்காட்சி உருவாக்கப்பட்டது என்பது பெருமை கொள்ளும் அம்சமாகும்.
உலகத்தரத்தில் கண்காட்சியை ஏற்பாடு செய்து, அனைத்து வெளிநாட்டு வர்த்தகர்களைக் கவரும் விதத்தில் அமைத்துக் கொடுத்த நமது பாரதப் பிரதமர் திரு, நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு, பியூஸ் கோயல் அவர்களுக்கும், மத்திய ஜவுளித்துறை செயலர் திருமதி. ரச்சனாஷா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பாரத் டெக்ஸ் சேர்மன் திரு நரேன் கோயங்கா அவருக்கும் தொடர்ந்து மிகச்சிறப்பாக திட்டமிட்டு நடத்துவதற்கு உதவிய மெசி பிராங்க் பர்ட்டுக்கும் (Messee Frankfurt) எனது மனமார்ந்த நன்றிகள்.
இக்கண்காட்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கென்று பிரத்தியேகமாக “திருப்பூர் நிட்வேர் பெவிலியன்” என்ற பெயரில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் திருப்பூரிலிருந்து 70 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் மற்றும் இந்திய நிட்பேர் அசோசியேஷனும் இணைந்து கண்காட்சியில் அரங்கம் அமைத்து, பார்வையிட்ட அத்தனை அனைத்து வெளிநாட்டு வர்த்தகர்களிடமும் (சஸ்டனபிலிட்டி) நிலைத்த தன்மை, வளம் குன்றா வளர்ச்சி என்ற முறையில் நம் திருப்பூரில் தயாராகும் ஆடைகளை பற்றி எடுத்துரைத்தனர். சர்வதேச தரத்தில் திருப்பூரில் தயாராகும் ஆடைகளை பற்றி வர்த்தகர்கள் கேட்டு வியந்தனர். இதன் மூலம், உலக அரங்கில் நமது திருப்பூக்குகென்று ஒரு தனி இடம், மற்றும் திருப்பூரின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் அமைந்தது என்பதில் உண்மையிலேயே நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தின் அரங்குகளை வெளிநாட்டு வர்த்தகர்கள் பார்வையிட்டு வியந்தனர். இதன் மூலம் புதிய வர்த்தகத் தொடர்புகள் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழியை ஏற்படுத்தியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை நம்முடன் வர்த்தக தொடர்பு இல்லாத, சீனாவுடன் அதிக தொடர்பில் இருந்த வர்த்தக நிறுவனங்கள் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களை பார்வையிட்டனர். வர்த்தக விசாரணையும் நடந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா போன்ற 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3000 வர்த்தகர்கள், 500 வர்த்தக முகவர்களும்/Sourcing Agency, கண்காட்சியை ஆவலுடன் பார்வையிட்டனர். குறிப்பாக உலக அளவில் புகழ்பெற்ற கீழ்க்கண்ட வர்த்தகர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர் என்பது சிறப்பு.
Primark, Coach, Tommy Hilfiger, Calvin Klein, Vero Moda, Coats, Toray, H&M, Gap, Target, Levis, Kohl’s, Nike, K-Mart, IKEA, YKK, Fortum, Lenzing, Anko, CIEL Group, Busana Group, Hyosung Corporation, Brandix Apparels, Teijin Ltd, Coats Group, Poeticgem Ltd, Italiya Inc Japan, Warp-N-Weft Designs- உள்ளிட்ட உலகளாவிய ஜவுளி முன்னணி நிறுவனங்களின் வர்த்தகர்கள், வர்த்தக முகவர்களும் பார்வையிட்டனர்.
இக்கண்காட்சி இந்திய ஜவுளித்துறையின் திறமையை மட்டுமல்லாது “BRAND INDIA” என்ற ஒரு அடையாளத்தையும் நமக்கு பெற்று தந்துள்ளது. மேலும் இக்கண்காட்சியின் மூலம் திருப்பூருக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மத்திய மத்திய அரசு, நமது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
The Apparel Export Promotion Council (AEPC) marked its 47th Foundation Day with a celebratory event…
New Delhi, February 2025: At Bharat Tex 2025, Tiruppur Exporters Association (TEA) Vice President, Shri…
A Global Spotlight on India’s Sustainability-Driven Textile Industry New Delhi, February 16, 2025: Bharat Tex…
Bharat Tex 2025 Showcases India’s Thriving Textile Industry New Delhi, February 14, 2025: Bharat Tex…
India’s MSME Textile Clusters Drive Sustainability Efforts New Delhi, February 14, 2025: Bharat Tex 2025,…
Discussions Highlight Investment Prospects and State Incentives for Exporters Tiruppur, February 7, 2025: The Tiruppur…