ஜூலை மாதத்தில் இந்திய ஆடை ஏற்றுமதி 14 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறுகிறார் ஆயத்த ஆடை மேம்பட்டுக்கழகத்தின் (Apparel Export Promotion Council) தென்னிந்திய பொறுப்பாளர் ஆ.சக்திவேல்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின்(AEPC) தென்னிந்திய பொறுப்பாளர் டாக்டர் சக்திவேல் கூறியதாவது, ஜூலை மாதத்தில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 13.8% வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த வருட ஜூலை மாதத்தோடு ஒப்பிடும் பொழுது ரூபாய் மதிப்பில் சுமார் 1,400 கோடி உயர்ந்து, ஆக மொத்தம் ஜூலை மாத ஏற்றுமதி ரூபாய் 10,677 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல் கடந்த 4 மாதங்களுக்கான (ஏப்ரல்-ஜூலை) மொத்த ஏற்றுமதி $ 5.13 பில்லியனாக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 42,800 கோடியாகும். இது சராசரியாக 7.6% வளர்ச்சியாகும். இதன் மூலம் நமது திருப்பூரின் ஏற்றுமதியும் சுமார் 400 கோடி அளவுக்கு கடந்த ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளதை காண முடிகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கான நமது ஏற்றுமதி உயர்ந்து உள்ளது. எனவே இந்நாடுகளின் நுகர்வு அதிகரித்திருப்பது தெரிகிறது. வரும் காலங்களில் இந்திய மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும். இதன் மூலம் கண்டிப்பாக நமது ஏற்றுமதி மேலும் வளர்ச்சி அடையும் ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் டாக்டர் சக்திவேல்.
Leave a Reply