உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்காக தர உத்திரவாத சேவை செய்யும் ஆய்வகங்களை நடத்தி வருகிறது இன்டர்டெக் ஆய்வக நிறுவனம். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உலகம் முழுவதும் உள்ளது. திருப்பூரில் ஜவுளித் துறைக்கான ஆய்வகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த நிறுவனம் ” ஐகேர் ” என்ற இணைய தளம் வாயிலாக புதிய சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த சேவைகள் பற்றிய விரிவான தகவல்களுக்காக இன்டர்டெக் ஆய்வக நிறுவனத்தின் திருப்பூர் கிளை துணை பொது மேலாளர் பி.ஜெயபால் அவர்களிடம் பேசினோம். அதிலிருந்து …
கேள்வி : வழக்கமான ஆடைகள் மற்றும் துணிகள் பரிசோதனை முறைக்கும் இப்போது நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள ஐகேர் இணையதள சேவை முறைக்கும் என்ன வேறுபாடு?
ஐகேர் என்பது புதுமையான டிஜிட்டல் போர்ட்டல். இதுநாள் வரை எங்கள் ஆய்வகத்திற்கு மாதிரி துணிகள் (Sample Garments) பரிசோதனை செய்வதற்காக நேரடியாகவோ, எங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ அல்லது கூரியர் வாயிலாகவோ அனுப்புவார்கள். மாதிரிகளைப் பெற்றுக் கொண்டவுடன் நாங்கள் எங்கள் அலுவலகத்தில் லிம்ஸ் (LIMS-LaboratoryInformation Management System) சாஃப்ட்வேர் மூலமாக பதிவு செய்து எங்கள் பணிகளை துவக்குவோம். பின்பு, பரிசோதனை முடிவுகளை (Testing Results) இ-மெயில் மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்போம். இதுதான் தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறை.
ஆனால், இப்போது புதிதாக ஐகேர் (I CARE ) என்ற ஒரு புதுமையான டிஜிட்டல் இணைய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த இணைய தளத்தில் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு உள் நுழைவு (Login ) வசதி ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த இணைய தளமும் லிம்ஸ் (Lims Software) மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, எங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் மாதிரி துணிகளும் ஆடைகளும் பதிவு செய்வோம். உங்கள் சேம்பிள்களின் தற்போதைய நிலை என்ன என்பதை நீங்களே தொடர்ந்து கண்கணிக்க முடியும்.
உதாரணமாக நீங்கள் அமேசானில் ஒரு பொருள் ஆர்டர் செய்தால் எப்படி அந்த ஆர்டரின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியுமா அப்படித்தான் தங்களின் சேம்பிள் பரிசோதனை நிலை எந்த அளவில் உள்ளது என்று அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக நீங்கள் ஒரு ஆடைக்கோ அல்லது துணிக்கோ பத்து டெஸ்ட் செய்ய கொடுத்திருந்தால் அதில் எத்தனை டெஸ்ட் முடிந்திருக்கிறது என்று நீங்கள் உங்கள் அலுவலகத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். எத்தனை சதவிகிதம் பணி முடிந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.
அதே போல நிறுவனங்கள் அவர்களே சேம்பிள்களின் தற்போதைய நிலைகளை அவர்களே தெரிந்து கொள்ள முடியுமென்பதால், எங்களை தொடர்பு கொண்டு ஒவ்வொரு தகவலையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. மேலும் ஜவுளி சேம்பிள்கள் பற்றியும் மேலும் விவரங்கள் அறிந்து கொள்ளவும் இங்கு சாட் போட் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்களை எங்கள் தொழில்நுட்ப வல்லுனர் உடனுக்குடன் வழங்குவார்கள்.
இந்த வசதி தற்சமயம் எகிப்து நாட்டிற்கு அடுத்ததாக இந்தியாவில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் ” என்றார் ஜெயபால்.
Leave a Reply