திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி சுவர்களில் ஆங்காங்கே படிக்கும் பாடங்கள் சம்பந்தமாக ஓவியங்களை வண்ணங்களால் காட்சிப் படுத்தியுள்ளனர்.
கோலம் நமது பண்பாட்டு செறிவின் வெளிப்பாடு. அரிசிமாவில் இடும் கோலம் எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகிறது. கோலம் இடுவது சீரண உறுப்புக்கு நன்மை பயக்கும். அதிக நேரம் கையை எடுக்காமல் குனிந்த நிலை மாறாமல் கோலம் இடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
கோலமிடுவதால் மன ஒருமைப்பாடு, கலை உணர்ச்சி, பல்வேறு வகையான சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன், அழகுணர்ச்சி, பொறுமை, கணக்கிடும் திறம் மேம்படுகிறது. இது ஒரு உடற்பயிற்சியாகவும், யோகாவாகவும் திகழ்கிறது.
இந்தியப் பாரம்பரியத்தை மக்கள் இன்றளவும் மறக்காமல் இருக்க இந்த இளம் மாணவனின் ஒரு புதிய முயற்சியாக சுவரில் ரதக்கோலம் வரைந்து வியபூட்டினார். இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை தொழில் முறை கணக்கியல் பயிலும் ர.அருண்குமார் என்ற மாணவன் சுவரில் கையெடுக்காமல் 525 சதுர அடி அளவில் அக்ரிலிக் பெயிண்ட் கொண்டு சுவரின் வண்ணம் பச்சை நிறத்திலும் ரதக்கோலம் வெண்மை நிறத்திலும் மே 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 5 நாட்களாக ரதம் வரைந்து கல்லூரியை கோயிலாக மாற்றினார்.
இந்த ரதக்கோலம் இந்தியா லிம்கா புத்தக சாதனைக்காக வரையப்பட்டது.
Leave a Reply