இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது முக்கிய துறைகளில் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் முதல் அக்டோபர் 2024 வரையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதி 468.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 436.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து 7.28% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.
அக்டோபர் 2024க்கான வர்த்தக ஏற்றுமதி 39.20 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது அக்டோபர் 2023 இல் 33.43 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 17.23% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் முதல் அக்டோபர் 2024 வரையிலான சரக்கு ஏற்றுமதி மொத்தம் 252.28 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, முந்தைய ஆண்டில் 244.51 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில், இது 3.18% நேர்மறையான வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.
அனைத்து ஜவுளிகளின் ரெடி-மேட் கார்மெண்ட்ஸ் (RMG) ஏற்றுமதியானது அக்டோபர் 2024ல் கணிசமான அளவு 35.06% அதிகரிப்பைக் கண்டுள்ளது, இது அக்டோபர் 2023 இல் 0.91 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து அக்டோபர் 2024 இல் 1.23 பில்லியனாக உயர்ந்துள்ளது.
டாக்டர். ஏ.சக்திவேல் இந்த தரவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது “இந்த நிலையான தொடர் வளர்ச்சி நமது ஏற்றுமதி துறையின் வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக ஆயத்த ஆடைகளில். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஆர்.எம்.ஜி ஏற்றுமதியில் 15-20% மேலும் வளர்ச்சியை அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நேர்மறையான போக்கு ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வலுவான ஊக்கமாகும்.
இந்த வளர்ச்சி நமது தரும் மற்றும் மிக நேர்த்தியான முறையில் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்புவதற்குமான ஒரு அங்கீகாரமாக தெரிகிறது. இந்த வளர்ச்சி முன்னேற கணித்தபடி நல்ல முறையில் செல்லும் பட்சத்தில் கண்டிப்பாக இந்த ஆண்டு நமது திருப்பூரின் ஏற்றுமதி ரூபாய் 40000 கோடியாக உயரும் என்று உறுதியாக நம்பலாம். ” என்று கூறுகிறார் ஏ.சக்திவேல்.
Leave a Reply