Knit India Magazine

பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியும் பள்ளிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா,திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.  விழாவிற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஆலோசனைக் குழு உறுப்பினர் மைக்கோ வேலுச்சாமி முன்னிலை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் திருக்குமரன் வரவேற்புரை ஆற்றினார். “திருப்பூரின் […]