Knit India Magazine

திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் அவர்களுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கலந்துரையாடல்!

Tiruppur Exporters Discussion

திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் எஸ்.கே.விமலநாதன் அவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சுங்கம் தொடர்பான சந்தேக நிவர்த்திக்கான கருத்தரங்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் மற்றும் கவுரவத் தலைவர் பத்மஸ்ரீ. டாக்டர் ஏ.சக்திவேல் தலைமையில் ஏற்றுமதியாளர்களுக்கு ICEGATE மற்றும் சிஸ்டம் (ICES) தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் எஸ்.கே விமலநாதன் கூடுதல் ஆணையர் விஜய் வேல் கிருஷ்ணா  ஆகியோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. […]

திருப்பூர் NIFT-TEA கல்லூரியில் இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி!

Free Entrepreneurship Development Training at Nift Tea College, Tirupur!

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மற்றும் NIFT-TEA கல்லூரி  இணைந்து  கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த தொழில் முனைவோராக,  இலவச தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி NIFT-TEA கல்லூரி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவில், NIFT-TEA கல்லூரியின் முதன்மை ஆலோசகர்,  ராஜா.M.சண்முகம், கல்லூரியின் நிர்வாக தலைவர் P. மோகன், திறன் மேம்பட்டுப்பிரிவின் தலைவர், K.மோகன்சுந்தரம் […]