திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் எஸ்.கே.விமலநாதன் அவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சுங்கம் தொடர்பான சந்தேக நிவர்த்திக்கான கருத்தரங்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் நிறுவனர் மற்றும் கவுரவத் தலைவர் பத்மஸ்ரீ. டாக்டர் ஏ.சக்திவேல் தலைமையில் ஏற்றுமதியாளர்களுக்கு ICEGATE மற்றும் சிஸ்டம் (ICES) தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் எஸ்.கே விமலநாதன் கூடுதல் ஆணையர் விஜய் வேல் கிருஷ்ணா ஆகியோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் கவுரவத் தலைவர் பத்மஸ்ரீ. டாக்டர் ஏ.சக்திவேல், சங்கத்தின் தலைவர் கே. எம். சுப்பிரமணியன். பொது செயலாளர் என்.திருக்குமரன், பொருளாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் குமார் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் எம். ஆனந்த் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் துணைத்தலைவர் ஆர். ராமு மற்றும் உறுப்பினர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் நிறுவனர் மற்றும் கவுரவத்தலைவர் ஏ. சக்திவேல் தனது தலைமை உரையில், “எங்களது வேண்டுகோளுக்கிணங்கி குறுகிய காலத்தில் சங்கத்திற்கு வருகை புரிந்து சங்க உறுப்பினர்களுக்கு சுங்கம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான சந்திப்பில் கலந்து கொண்டதற்கு நன்றி ” என்று தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் கே. எம். சுப்பிரமணியன், ஏற்றுமதியாளர்கள் பரவலாக சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களான, DGFT போர்டலில் பதிவேற்றம் செய்யப்படுகின்ற தகவல்கள் EDPMS, IDPMS மற்றும் ICEGATE போர்டல்-களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது. ஏற்றுமதியாளர்களின் கணக்கில் ROSCTL மற்றும் RoDTEP ஆகியவற்றின் இருப்புத்தொகை தவறாக காண்பிப்பது, ஏற்றுமதியாளர்களுக்கு தவறான Demand Notice வருவது போன்றவைகளை நிவர்த்தி செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
பங்கேற்பாளர்களின் RoSCTL, RoDTEP, டிராபேக், BRC, ஷிப்பிங் பில்ஸ், Licence மாற்றங்கள் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் திரு. எஸ்.கே. விமலநாதன் பதிலளித்ததுடன், ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை TEA மற்றும் AEPC மூலமாக தங்களது கவனத்திற்கு கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார். இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்றுமதி வாயிலாக அதிக அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், திருப்பூர் செட்டிபாளையத்தில் உள்ள ICD-யில் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு ஆய்வாளர் கொண்ட உதவி மையம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சங்கத்தின் நிறுவனர் மற்றும் கவுரவத்தலைவர் ஏ. சக்திவேல் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை அன்று ஏற்றுமதியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் திரு. எஸ்.கே.விமலநாதன்.
Leave a Reply