துணை முதல்வராக பதவியேற்று முதன்முறையாகத் திருப்பூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் Dr. ஆ. சக்திவேல் அவரை சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
சந்திப்பின்போது திருப்பூரை பற்றியும் திருப்பூர் பின்னலாடை தொழில் பற்றியும் விரிவாக எடுத்துரைத்த சக்திவேல் இந்தத் தொழில் மூலமாக ஏராளமான அந்நிய செலாவணி ஈட்டுவதில் திருப்பூர் முதன்மையாக இருந்து வருவதையும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து கீழ்க்கண்டகோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார்.
- பிற மாநில திட்டங்களின் ஒத்த மானியம் வழங்குதல்
- பசுமை ஆற்றல் மானியம்
- நிட்வேர் போர்டு அமைத்தல்
- திருப்பூரில் ஏற்றுமதி மையம் மற்றும் பேப்ரிக் சோதனை மையங்களை நிறுவுதல்
- மினி டெக்ஸ்டைல் பார்க்
- MSME அல்லாதவர்களுக்கு ஏற்ற மானியங்கள்
- திருப்பூர் கிளஸ்டரை நிலையான கிளஸ்டராக மாற்றுவதற்கு ஆதரவளிக்கக் கோரிக்கை
- தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் தங்குமிட வசதி ஏற்படுத்தித் தருவது
- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பேருந்துகளில் விதிக்கப்படும் சாலை வரி விலக்கு
- தொழில்துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவது
போன்ற கோரிக்கைகளை துணை முதல்வரிடம் விளக்கி கூறி பின்னலாடை துறைக்கு சலுகைகைகளை விரைந்து வழங்கிடவும் கேட்டுக்கொண்டார்.
துணை முதல்வரும் இக்கோரிக்கைகளை கேட்டு விரைந்து தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
Leave a Reply