
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கழகம் மற்றும் திருப்பூர் முதலிபாளையம், நிப்ட்-டீ பேஷன் கல்லூரியும், இணைந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி துறையில் பணியாற்ற இலவச திறன் பயிற்சிகள் – TNSDC திட்டத்தின் கீழ் நகரப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்கள், பயிற்சியில் சேர்ந்து வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு இது ஓரு நல்ல வாய்ப்பு.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது டெக்ஸ்டைல் மற்றும் ஆடை தயாரிப்பு துறைதான். விவசாயத்திற்கு அடுத்தபடியாக நமது நாட்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை அதிகமாக வழங்குவது இத்துறைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 8500 சிறு குறு மற்றும் நடுத்தர ஆடை வடிவமைப்பு நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த நகரத்தில் சுமார் 7 முதல் 8 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். புதிய வேலை வாய்ப்பிற்காக இந்த நகரத்தின் உடனடி தேவை ஒரு லட்சம் பேர். வரும் ஆண்டில் இந்தத் தேவையானது லட்சக்கணக்கில் அதிகரிக்கும்.


மேலும் இத்தொழில் மாநிலம் முழுவதும் விரிவடையும் சூழல் உள்ளது. இத்துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சி பெற்ற நபர்களை உருவாக்குவதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தால் தொடங்கப்பட்ட NIFT TEA தொழிற்பயிற்சிக் கல்லூரி, திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
NIFT-TEA திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், அவர்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் மற்றும் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற சேவை நோக்கில், மாநில அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் பங்களிப்போடு,
TNSDC (தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்) என்ற திட்டத்தின் மூலமாக, 18 வயதில் இருந்து 35 வயதிற்கு உட்பட்ட, இளைஞர்களுக்கு இந்த ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சார்ந்த திறன் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று உடனடியாக வேலைவாய்ப்புப் பெறலாம்
தற்போது வழங்கப்படும் பயிற்சிகள்
ஆடை வடிவமைப்பு சார்ந்தத் துறையில் “Assistant Fashion Designer ” பயிற்சி துவங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சியில் குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் சேரலாம்.




இந்த பயிற்சியில் 120 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தங்குமிடம், உணவு மற்றும் பாடப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திறன் பயிற்சியோடு தையற்கலை பயிற்சி, பேட்டன் மேக்கிங் மற்றும் கணினிப் பயிற்சி, ஆங்கிலக் கல்வி, மற்றும் மென்திறன் பயிற்சி, ஆகியனவும் இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
மாநில அரசின் SSC மூலம் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூபாய் 12,000 முதல் 15,000 வரை சம்பளம் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. முன்னணி ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் 100% உறுதியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்தப் பயிற்சியில் சேர்வதற்கும் மேலும் விபரங்களுக்கும் 8056323111, 8754623111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Leave a Reply