மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மற்றும் NIFT-TEA கல்லூரி இணைந்து கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த தொழில் முனைவோராக, இலவச தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி NIFT-TEA கல்லூரி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவில், NIFT-TEA கல்லூரியின் முதன்மை ஆலோசகர், ராஜா.M.சண்முகம், கல்லூரியின் நிர்வாக தலைவர் P. மோகன், திறன் மேம்பட்டுப்பிரிவின் தலைவர், K.மோகன்சுந்தரம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தின் கோயம்புத்தூர் மண்டல துணை இயக்குநர் B.இராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு ஆயத்தஆடை உற்பத்தி துறையில் வளர்ந்துவரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் பண்புகள், குறிக்கோள்கள், தொழில்துவங்க வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Leave a Reply