மத்திய மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஆதரவில் இயங்கிவரும் ஜவுளி மற்றும் ஆடை துறைக்கான இன்குபேஷன் மையம் திருப்பூர் நிஃப்ட் டீ கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. புதுமையான ஸ்டார்ட்-அப் – உருவாக்குவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஒரு முன்னோடி முயற்சியாக இந்த மையம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்அதி நவீன இயந்திரங்கள், மேம்பட்ட ஆய்வகங்கள், தேசிய மற்றும் உலகளாவிய வழிகாட்டிகளின் வலையமைப்பிற்கான அணுகல் உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்புகளை இந்த மையம் கொண்டுள்ளது.
அடல் இன்குபேஷன் சென்டர் NIFT-TEA ஜவுளித் துறையில் குறிப்பாக புதுமைகளை வளர்க்கும் குறிக்கோளுடன் நிறுவப்பட்டது. AIC NIFT-TEA ஜவுளி தொழில்நுட்பம், உற்பத்தி செயல்முறைகள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகிறது. அதன் தொடர்ச்சி நிகழ்வாக NIFT-TEA இன்குபேஷன் மையத்தில், தமிழ்நாடு அரசின் ஜவுளி மற்றும் கைத்தறி துணிநூல் துறை இயக்குனர் ஸ்ரீமதி லலிதா ஐஏஸ் மற்றும் மண்டல துணை இயக்குனர் ராகவன் அவர்களும், NIF-TTEA அடல் இன்குபேஷன் மையத்தில் உள்ள தொழில்நுட்ப ஜவுளி துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய – ஸ்டாட் – அப் நிறுவனங்களுடன் கலந்துரையாடினர்கள்
மத்திய மற்றும் மாநில அரசின் தொழில் நுட்ப ஜவுளித் துறைக்கான உதவிகள் மற்றும் திட்டங்கள் அனைவரிடமும் சென்றடைய இன்குபேஷன் மையம் உதவி புரிய வேண்டும் என்றும் மாநில அரசின் ஆராய்ச்சி திட்ட நிதி உதவிகளை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உப்பு இல்லா சாயமேற்றும் தொழில் நுட்பம், இயற்கை சாயமேற்றுதல், துணி கழிவில் இருந்து பேக்கேஜிங் பொருட்கள் தயாரித்தல், மகளிருக்கான இயற்கை இடுபொருட்களுடன் தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின் போன்ற பொருட்களை தொழில் முனைவோர்கள் காட்சிப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக டெக்ஸ்டைல் டையிங்கின் கழிவு நீரில் உள்ள உபயோகிக்க முடியாத உப்பு மற்றும் ரசாயனங்களைத் தனித்தனியே பிரித்து அவற்றை மீண்டும் உபயோகிக்கும் உப்பு மற்றும் ரசாயனமாக மாற்றும் மிகச்சிறந்த முறையை கண்டுபிடித்த ஸ்டார்ட்டப்-ஐ அவர் பாராட்டினார், மேலும் இதை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட NIFT-TEA கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா ஷண்முகம், தலைவர் மோகன் மற்றும் ஆராய்ச்சித்துறை குழு மற்றும் இன்குபேஷன் மைய தலைவர் செந்தில் குமார் ஸ்ரீமதி லலிதா IAS அவர்களிடம் இன்குபேஷன் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் NIFT-TEA ஆராய்ச்சித்துறையின் கண்டுபிடிப்புகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.
Leave a Reply